ஜெ., உடல்நிலையில் முன்னேற்றம் : நேரில் பார்த்த கவர்னர் மகிழ்ச்சி !!

முதல்வர் ஜெயலலிதா, உடல் நலக்குறைவால், செப்., 22ல், சென்னை, அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார். அவருக்கு, லண்டன் மற்றும் சிங்கப்பூர் டாக்டர் களும், டில்லி எய்ம்ஸ் டாக்டர்களும், சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இம்மாதம், 1ம் தேதி, கவர்னர் வித்யாசாகர் ராவ், அப்பல்லோ மருத்துவமனை சென்று, முதல்வர் உடல்நலம் குறித்து விசாரித்து சென்றார்.


அதைத் தொடர்ந்து, முதல்வர் கவனித்து வந்த துறைகள், நிதி அமைச்சர் பன்னீர்செல்வத்திற்கு மாற்றப்பட்டன. இரண்டாவது முறையாக,
கவர்னர் வித்யாசாகர் ராவ், அப்பல்லோ மருத்துவ மனை சென்றார். காலை, 11:25 மணிக்கு வந்தவர், 11:55 மணிக்கு புறப்பட்டு சென்றார்.

இது தொடர்பாக, கவர்னர் மாளிகை வெளியிட்ட செய்திக்குறிப்பு: மருத்துவ மனைக்கு சென்ற கவர் னரிடம், அப்பல்லோ மருத்துவ மனை தலைவர் பிரதாப் ரெட்டி, முதல்வருக்கு அளிக்கப் படும் சிகிச்சை முறைகளை விளக்கினார்.

தீவிர சிகிச்சை, இதய பிரிவு, சுவாச சிகிச்சை மற்றும் சர்க்கரை நோய் பிரிவு டாக்டர்கள், தொடர்ந்து முதல்வரை கண்காணித்து, சிகிச்சை அளித்து வருகின்றனர். ஜெயலலிதா சிகிச்சைக்கு ஒத்து ழைப்பு தருவதுடன், குறிப்பிடத்தக்க அள வில், பேசத் துவங்கி உள்ளார் என, கவர்னரிடம் தெரிவிக்கப்பட்டது.

அதன்பின், முதல்வர் சிகிச்சை பெறும் வார்டுக்கு, கவர்னர் சென்றார். அங்கு, முதல்வர் உடல்நிலை யில் ஏற்பட்டுள்ளமுன்னேற்றம் கண்டு மகிழ்ச்சி தெரிவித்தார்.

முதல்வருக்கு, சிறப்பாக சிகிச்சை அளிக்கும்
டாக்டர் களுக்கு நன்றி தெரிவித்தார்.

கவர்னரை, லோக்சபா துணை சபாநாயகர், தம்பிதுரை, அமைச்சர்கள், பன்னீர்செல்வம், தங்கமணி, வேலுமணி, விஜயபாஸ்கர், தலைமைச் செயலர்ராமமோகன ராவ் வரவேற்றனர். இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.




நலம் விசாரித்த மத்திய அமைச்சர் :

அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், முதல்வர் ஜெயலலிதாவின் உடல் நலம் குறித்து விசாரிக்க, தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த, மத்திய இணை அமைச்சர் ஒய்.எஸ்.சவுத்ரி, அக்கட்சியின் எம்.பி., ரமேஷ் ஆகியோர் நேற்று வந்தனர். மருத்துவமனையில், முதல்வர் உடல் நலம் பற்றி விசாரித்தனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...