ரூ.1,009 கோடியில் புதிய வாக்குப் பதிவு இயந்திரங்கள்: அமைச்சரவை ஒப்புதல்!!!

வரும் 2019-ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக, புதிய மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை தேர்தல் ஆணையம் வாங்குவதற்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
இதுதொடர்பாக, மத்திய அரசு வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது:

வரும் 2017-18-ஆம் நிதியாண்டில் 4,10,000 வாக்குப் பதிவு இயந்திரங்கள், 3,14,000 கட்டுப்பாட்டு அலகுகள் ஆகியவற்றையும், 2018-19-ஆம் நிதியாண்டில் 4,35,306 வாக்குப் பதிவு இயந்திரங்கள், 71,716 கட்டுப்பாட்டு அலகுகள் ஆகியவற்றையும் தேர்தல் ஆணையம் வாங்குவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
இதற்காக, ரூ.1,009.6 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த இயந்திரங்களை, பெங்களூரில் உள்ள பாரத் எலக்ட்ரானிக் லிமிடெட் நிறுவனம், ஹைதராபாதில் உள்ள எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் நிறுவனம் ஆகிய நிறுவனங்களிடம் இருந்து தேர்தல் ஆணையம் வாங்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...