புவியை கண்காணிக்கும் ரிசோர்ஸ் சாட்-2ஏ: வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!!

புவியை கண்காணிக்கும் ரிசோர்ஸ் சாட்-2ஏ செயற்கைக்கோள், பி.எஸ்.எல்.வி சி-36 ராக்கெட் மூலம் சதீஸ்தவான் விண்வெளி நிலையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 10.43 மணிக்கு விண்ணில் பாய்ந்தது.
கடந்த 2003ஆம் அண்டு ரிசோர்ஸ் சாட்-1 செயற்கைக்கோளையும், 2011-ஆம் ஆண்டு ரிசோர்ஸ் சாட்-2
செயற்கைக்கோளையும் இஸ்ரோ விண்ணில் ஏவியது. இதையடுத்து ரிசோர்ஸ் சாட்-2ஏ செயற்கைக்கோளை ஏவ இஸ்ரோ திட்டமிட்டது. இதனை 1,235 கிலோ எடையில், புவியை கண்காணிக்க மற்றும் தொலை உணர்வுக்காக தயாரித்துள்ளது.
இந்த செயற்கைக்கோள் பி.எஸ்.எல்.வி சி-36 ராக்கெட் மூலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ்தவான் விண்வெளி நிலையத்தின் முதலாவது ஏவுதளத்தில் இருந்து, இன்று காலை 10.43 மணிக்கு விண்ணில் செலுத்தப்பட்டது. இதற்கான 36 மணி நேர கவுண்ட்டவுன் நேற்று இரவு 10.25 தொடங்கியது.
இந்த செயற்கைக்கோள் புவியில் இருந்து 817 கி.மீ தூரத்தில் சுற்றுவட்டப்பாதையில் நிலைநிறுத்தப்படும். 5 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்ட இந்த செயற்கைக்கோள் மூலம், புவியில் உள்ள இயற்கை வளங்களை துல்லியமாக படம்பிடிக்க முடியும்.
1994 மற்றும் 2016க்கும் இடையில், பி.எஸ்.எல்.வி. 121 செயற்கைக்கோள்கள்களை விண்ணில் செலுத்தி சாதனை படைத்துள்ளது, இதில், 79 செயற்கைக்கோள்கள் வெளிநாடுகளில் இருந்தும் 42 செயற்கைக்கோள்கள் இந்தியாவிலிருந்தும் செலுத்தியுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...