வேக கட்டுப்பாட்டு கருவி ஜன., 31 வரை அவகாசம்!!!

பொது போக்குவரத்துக்கான கனரக வாகனங்களில், வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்துவதற்கான காலக்கெடு, ஜன., 31 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.


சாலை விபத்துகளில், பலியாவோர் எண்ணிக்கையை குறைக்க, வாகனங்களில் வேகக்


கட்டுப்பாட்டு கருவி பொருத்த, 2015 அக்., மாதம் அரசாணை வெளியிடப்பட்டது. அதில், '2015 அக்., 1க்கு பின் தயாரிக்கப்படும் வாகனங்கள், 80 கி.மீ., வேகத்துக்கு மேல் செல்லாத வகையில், வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்த வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டிருந்தது.


தற்போது, இயங்கி கொண்டிருக்கும் கனரக வாகனங்கள், நடப்பாண்டு ஏப்., மாதத்துக்குள் வேகக் கட்டுப்பாட்டு கருவி பொருத்த, அவகாசம் வழங்கப்பட்டது. லாரி உரிமையாளர்கள், தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியதை தொடர்ந்து, அக்., 31 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது. தற்போது, 2017 ஜன., 31 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டு உள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...