தமிழகம் முழுவதும் ஜெயலலிதா இறந்த அதிர்ச்சியில் 66 பேர் சாவு!!!

தமிழகம் முழுவதும் ஜெயலலிதா மரண செய்தியை கேட்ட அதிர்ச்சியில் 66 பேர் இறந்தனர். புதுவையில் ஒருவர் இறந்தார்.காஞ்சீபுரத்தில் 2 பேர்

காஞ்சீபுரம் மாவட்டம் கல்பாக்கம், கடலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயராமன்(வயது 60). தீவிர அ.தி.மு.க. தொண்டரான இவர் நேற்றுமுன்தினம் இரவு முதல்–அமைச்சர் ஜெயலலிதா
மரணம் அடைந்தார் என்ற செய்தியை டெலிவிஷனில் பார்த்தபோது மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.வாலாஜாபாத் ஒன்றியம் தென்னேரி கிராமத்தை சேர்ந்தவர் சையத் ரசூல் (70). அ.தி.மு.க. தொண்டரான இவர் வீட்டில் டி.வி.யில் ஜெயலலிதா மரணம் குறித்த செய்தியை பார்த்ததும் அதிர்ச்சியில் மயங்கி விழுந்து இறந்தார்.திருவள்ளூரில் 5 பேர்

திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம், கொண்டஞ்சேரியை சேர்ந்த கே.ஏ.வடமலை(77), திருவொற்றியூர் வடக்குமாட வீதியை சேர்ந்த லட்சுமணன் மனைவி பத்மாவதி (58) ஆகியோர் டி.வி.யில் ஜெயலலிதா மரண செய்தியை பார்த்து மயங்கி விழுந்து இறந்தனர்.பொன்னேரி, மேலபட்டரையை சேர்ந்த நைனியப்பன்(40), மீஞ்சூரை அடுத்த தேவதானத்தைச் சேர்ந்த தீனம்மாள்(57), திருவள்ளூரை சேர்ந்த ராகவன்(70) ஆகியோர் ஜெயலலிதா மரண செய்தியை பார்த்து அதிர்ச்சியில் மயங்கி விழுந்து இறந்தனர்.வேலூர், திருவண்ணாமலையில் 4 பேர்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி குன்னத்தூரை சேர்ந்த சுரேஷ் (24) நேற்று காலை ஜெயலலிதா இறந்த செய்தியை பார்த்து தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். வெம்பாக்கம், தூசி அருகேயுள்ள அப்துல்லாபுரத்தை சேர்ந்த சையத்வக்த் (68), வேலூர் மாவட்டம் வல்லம் கிராமத்தை சேர்ந்த அ.தி.மு.க. மாவட்ட பிரதிநிதி அறிவழகன் (60), நாச்சியார்வட்டத்தை சேர்ந்த கோவிந்தராஜன் (45) ஆகியோர் ஜெயலலிதா மரணம் அடைந்த தகவலை கேட்டு அதிர்ச்சியில் இறந்தனர்.கடலூர், விழுப்புரத்தில் 4 பேர்

கடலூர் மாவட்டம் சோழத்தரத்தை சேர்ந்த ஆசிரியர் ஜாகீர்உசேன் (48) நேற்று முன்தினம் இரவு ஜெயலலிதா மரண செய்தியை டி.வி.யில் பார்த்ததும் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.விழுப்புரம் அருகே உள்ள வெங்கந்தூர் கிராமத்தை சேர்ந்த இருசப்பன் (48), திருவெண்ணெய்நல்லூர் காரப்பட்டை சேர்ந்த பாலசுப்பிரமணியன் (43), திட்டக்குடி திருவட்டத்துறையை சேர்ந்த சுப்பிரமணியம் மனைவி பூங்காவனம் (52) ஆகியோர் ஜெயலலிதா மரண செய்தியை கேள்விப்பட்டதும் அதிர்ச்சியில் இறந்தனர்.தஞ்சை, நாகையில் 2 பேர்

நாகையை அடுத்த கீச்சாங்குப்பம் வியாசர் நகரை சேர்ந்த ராமன் (49) நேற்றுமுன்தினம் இரவு வீட்டில் டி.வி. பார்த்துக் கொண்டு இருந்தபோது ஜெயலலிதா மரண செய்தியை பார்த்து அதிர்ச்சியில் இறந்தார்.தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரத்தை சேர்ந்த சொக்கலிங்கம் (62) நேற்றுமுன்தினம் இரவு ஜெயலலிதா மரண செய்தியை பார்த்து அதிர்ச்சியில் இறந்தார்.4 மாவட்டங்களில் 11 பேர்

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி, மேலபொன்னன் விடுதி கிராமத்தை சேர்ந்த செல்வம் என்பவரின் மகள் மனுநாயகி(25). எம்.சி.ஏ. பட்டதாரியான இவர், ஜெயலலிதா இறந்த தகவல் வெளியானதும் மயங்கி விழுந்து இறந்தார். கறம்பக்குடி அருகே உள்ள கணக்கண்காடு கிராமத்தை சேர்ந்த தங்கராசுவின் மனைவி பாப்பு (53), கந்தர்வகோட்டை புதுநகர் கிராமத்தை சேர்ந்த சின்னப்ப உடையார் மனைவி பொன்னம்மாள்(65), கீரமங்கலம் துரைராசு (65) ஆகியோர் ஜெயலலிதா மரண செய்தி கேட்டு அதிர்ச்சியில் இறந்தனர்.பெரம்பலூர் திருப்பெயர் கிராமத்தை சேர்ந்த ராமசந்திரன் (55) அதிர்ச்சியில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். பெரம்பலூர் சங்குபேட்டையை சேர்ந்த சுப்பிரமணியன் (55) மயங்கிவிழுந்து இறந்தார்.திருச்சி திருவெறும்பூரை சேர்ந்த ஆரோக்கியசாமி (80), கரூர் மாவட்டம், கோட்டக்கரையை சேர்ந்த முருகன் மனைவி வெள்ளையம்மாள் (42), சுல்லாமணிபட்டி குணசேகரன்(45), பெரியபனையூரை சேர்ந்த குப்பாண்டி(70), குளித்தலை மேட்டுமருதூரை சேர்ந்த முத்து(65) ஆகியோர் ஜெயலலிதா மரண செய்தியை கேட்டு அதிர்ச்சியில் இறந்தனர்.சேலத்தில் 7 பேர்

சேலத்தை சேர்ந்த சரவணன்(40), தாரமங்கலம் சிக்கம்பட்டியை சேர்ந்த பழனிசாமி(48), மாணிக்கம்(82), அமானி கொண்டலாம்பட்டியை சேர்ந்த ராமலிங்கம் மனைவி கமலா (60) ஆகியோர் ஜெயலலிதா மரண செய்தியை பார்த்ததும் மாரடைப்பில் இறந்தனர். கன்னங்குறிச்சியை சேர்ந்த கோவிந்தன் (50) அதிர்ச்சியில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.காடையாம்பட்டி சந்தைப்பேட்டையை சேர்ந்த ராஜா என்பவரது மனைவி குமுதவல்லி(30), தேவூர், காவேரிப்பட்டியை சேர்ந்த பெருமாள் மனைவி அய்யம்மாள்(65) ஆகியோர் ஜெயலலிதா மறைவு செய்தியை பார்த்து அதிர்ச்சியில் மயங்கி விழுந்து இறந்தனர்.தர்மபுரியில் 4 பேர்

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல், ஊட்டமலையை சேர்ந்த முருகேசன் (55) குடும்பத்தினர் ஜெயலலிதா மறைவையொட்டி சென்னை சென்றுவிட்டனர். வீட்டில் தனியாக சோகத்துடன் இருந்த முருகேசன் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.காரிமங்கலம் கும்பாரஅள்ளியை சேர்ந்த சின்னசாமி (36) ஜெயலலிதா இரங்கல் கூட்டத்திற்கு மைக்செட் அமைக்கும் பணியில் ஈடுபட்டபோது மின்சாரம் தாக்கி இறந்தார். மொரப்பூர் மோட்டூர் கிராமத்தை சேர்ந்த மணி (53), தர்மபுரி இலக்கியம்பட்டியை சேர்ந்த துரை (54) ஆகியோர் நேற்று டி.வி.யில் ஜெயலலிதா இறுதி நிகழ்ச்சிகளை பார்த்தபோது மாரடைப்பு ஏற்பட்டு இறந்தனர்.கிருஷ்ணகிரியில் 8 பேர்

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் வீரமலை அ.தி.மு.க. கிளை செயலாளர் சின்னபிள்ளை (63), சின்னகரடியூர் முன்னாள் கிளை செயலாளர் மாணிக்கம் (70), விளங்காமுடியைச் சேர்ந்த பாப்பாத்தி (60) ஆகியோர் நேற்று காலை டி.வி. பார்த்துக் கொண்டிருந்தபோது அதிர்ச்சியில் மயங்கி விழுந்து இறந்தனர்.போச்சம்பள்ளி நரால்சந்தம்பட்டியைச் சேர்ந்த செல்வபாஸ்கரன் (28), பர்கூர் செக்கில்நத்தம் கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ் (62), சாமல்பட்டி அருகே உள்ள தனியார் பால் நிறுவன காவலாளி பாலசுப்பிரமணியன் (55), பர்கூர் ஒரப்பம் ஊராட்சி முன்னாள் வார்டு உறுப்பினர் கிருஷ்ணன் (35) காவேரிப்பட்டணம் பனகமுட்லுவை சேர்ந்த மொரப்பூரான் என்பவரது மனைவி காளியம்மாள் (65) ஆகியோரும் ஜெயலலிதா மரண செய்தியை கேட்டு அதிர்ச்சியில் இறந்தனர்.நாமக்கல்லில் 2 பேர்

சிவகாசியில் இருந்து குஜராத் மாநிலத்திற்கு தீப்பெட்டி பாரம் ஏற்றிக்கொண்டு நாமக்கல் வழியாக சென்று கொண்டு இருந்த லாரி டிரைவர் சிங்காரம் (45) ஒரு பட்டறையில் லாரியை நிறுத்தியிருந்தபோது நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்தார்.பரமத்தி வேலூர் பாண்டமங்கலத்தை சேர்ந்த சேகர் என்பவரின் மனைவி மீனா (52) டி.வி.யில் ஜெயலலிதா இறந்த செய்தியை பார்த்ததும் நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்தார்.திருப்பூர், ஈரோட்டில் 3 பேர்

ஈரோடு திருநகர் காலனியை சேர்ந்த எம்.ஜி.ஆர். தாசன் என்கிற சிதம்பரம் (48), மொடக்குறிச்சி எழுமாத்தூர் ஊராட்சி அ.தி.மு.க. செயலாளர் கதிர்வேல் (47) ஆகியோர் ஜெயலலிதா மறைவால் அதிர்ச்சி அடைந்து மரணம் அடைந்தனர்.திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சிவன்மலையை சேர்ந்த செந்தில்குமார் (30) டி.வி.யில் ஜெயலலிதா கவலைக்கிடம் என்ற செய்தியை பார்த்ததும் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.கோவை, நீலகிரியில் 3 பேர்

கோவை புலியகுளத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி (46), ஆனைமலை சோமன்துறைசித்தூரை சேர்ந்த பாலசுப்பிரமணி (62) ஆகியோர் ஜெயலலிதா மரணம் அடைந்த செய்தியை கேட்டு மாரடைப்பு ஏற்பட்டு இறந்தனர். கோவை சின்னியம்பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணியம் (50) ஜெயலலிதா மரணமடைந்த வேதனையில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.அன்னூர் ஆத்திக்குட்டையை சேர்ந்த ராமச்சந்திரன் (45) ஜெயலலிதா மரண செய்தியை கேட்டதும் தீக்குளித்தார். கவலைக்கிடமான நிலையில் அவர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.நீலகிரி மாவட்டம் குன்னூர் பாய்ஸ்கம்பெனியை சேர்ந்த வின்பிரட் (61) ஜெயலலிதா மறைவையொட்டி நேற்று நடந்த மவுன ஊர்வலத்தில் கலந்துகொண்டபோது மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.திண்டுக்கல், தேனியில் 4 பேர்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே உள்ள செக்காபட்டியை சேர்ந்த முத்துசாமிபிள்ளை மனைவி ராஜாத்தியம்மாள் (75), நீலமலைக்கோட்டை குமாரப்பாளையத்தை சேர்ந்த சுப்பிரமணி (50) ஆகியோர் டி.வி.யில் ஜெயலலிதா மரண செய்தியை பார்த்தபோது மயங்கி விழுந்து இறந்தனர்.நீலமலைக்கோட்டை கரியகவுண்டன்புதூரை சேர்ந்த தண்டபாணி (52), தேனி அல்லிநகரத்தை சேர்ந்த பாலு (51) ஆகியோர் ஜெயலலிதா இறந்த செய்தியை டி.வி.யில் பார்த்தபோது மயங்கி விழுந்து இறந்தனர்.விருதுநகரில் 3 பேர்

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகிலுள்ள நாசர்புளியங்குளத்தை சேர்ந்த ராமசாமி என்பவரின் மனைவி பஞ்சவர்ணம்(61). ஜெயலலிதா மரணம் அடைந்த செய்தியைக் கேட்டதும் அதிர்ச்சியில் மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார். நரிக்குடி ஒன்றியம் திம்மாபுரம் மணக்குளம் கிராமத்தை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் ராமச்சந்திரன்(58) என்பவரும் ஜெயலலிதா மரணச்செய்தி கேட்டதும் மாரடைப்பு ஏற்பட்டு இறந்துபோனார்.ராஜபாளையம் அருகிலுள்ள முதுகுடி கிராமத்தை சேர்ந்தவர் மகாலிங்கம் (55). அ.தி.மு.க. தொண்டரான அவர் நேற்று காலை எழுந்தபோது ஜெயலலிதா மரணம் அடைந்த தகவல் தெரியவந்தது. அந்த அதிர்ச்சியில் அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு சிறிது நேரத்தில் அவர் இறந்தார்.நெல்லை, குமரி 4 பேர்

நெல்லை மாவட்டம்வள்ளியூரை சேர்ந்த அய்யாக்குட்டி(45) ஜெயலலிதா மரணம் அடைந்ததால் தெப்பக்குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்டார். மேலப்பாவூரை சேர்ந்த ராமையா மனைவி கல்யாணி (65) அதிர்ச்சியில் இறந்தார்.குமரி மாவட்டம் குளச்சல் சீம்பிலிவிளையை சேர்ந்த அசன்கண் என்கிற பொடிகண் (65), அனந்தநாடார்குடியை சேர்ந்த ரூபன் ஜெபக்குமார் (29) ஆகியோர் ஜெயலலிதா மரண செய்தியை அறிந்ததும் மயங்கி விழுந்து இறந்தனர்.புதுவையில் ஒருவர்

புதுவை மாநிலம் கிருமாம்பாக்கத்தை சேர்ந்த ராமச்சந்திரன் (70) நேற்று காலை ஜெயலலிதா இறந்தது பற்றி அறிந்ததும் மயங்கி விழுந்து இறந்தார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...