இரண்டு நாட்களில் பெரும் மழைக்கு வாய்ப்பு!!

நாடா புயலையடுத்து, மற்றொரு புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில், நவம்பர் 30ஆம் தேதி உருவான நாடா புயல், தமிழகம், கேரளா, கர்நாடகா மாநிலங்களைக் தாண்டி கரையைக் கடந்தது. இந்நிலையில், அந்தமான் நிக்கோபர் தீவுகள் அருகே மையம்

கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “விசாகப்பட்டினத்துக்கு தென்கிழக்கே 1,260 கிலோமீட்டர் தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டிருக்கிறது. இன்னும் இரு தினங்களில், விசாகப்பட்டினத்தை நோக்கி நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், தமிழகத்தின் தென் கடலோர பகுதிகளிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. மேலும், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாற வாய்ப்புள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால், காற்றுழுத்த தாழ்வு மண்டலத்தை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...