விவசாயத்துக்கு வரி இல்லை - ரவிசங்கர் பிரசாத்!

‘விவசாய உற்பத்திக்கும், தங்க நகைகளுக்கும் புதிய வரிகள் எதுவும் விதிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இல்லை’ என்று சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.



பாஜக கட்சியின் ‘பரிவர்த்தன் யாத்ரா’ கூட்டத்தில் உரையாற்றிய மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், “பிரதமர் மோடியின் தலைமையிலான அரசு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அவரது பண மதிப்பிழப்பு அறிவிப்பு பணக்காரர்களுக்கும் ஏழை மக்களுக்கும் பொதுவான ஒரு திட்டமாக அமைந்துள்ளது. ஒரு சிலர் விவசாயத்துக்குப் புதிதாக வரி விதிக்கப்படும் என்று சர்ச்சைகளை எழுப்பி வருகின்றனர். ஆனால், விவசாயிகளுக்கு வருமான வரி விதிக்கும் எண்ணம் அரசுக்கு ஒருபோதும் இல்லை. மேலும், தங்க நகைகளுக்கும் புதிய வரி எதுவும் விதிக்கப்படாது.

இந்தியா பணமற்றப் பொருளாதாரத்தை நோக்கி பயணித்து வருகிறது. அதற்கான முதற்கட்டபடியே இந்த பணமதிப்பிழப்பு அறிவிப்பு. எனவே மக்கள் அரசை முழுவதுமாக நம்ப வேண்டும். தேவையற்றை சர்ச்சைகளை ஏற்க வேண்டாம். மக்கள் இந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையை ஆதரிக்கின்றனர். ஆனால், எதிர்க்கட்சியினரே சர்ச்சைகளை எழுப்பி வருகின்றனர்” என்றார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...