அனைத்து கோர்ட்டுகளிலும் வீடியோ கான்பரன்ஸ் வசதி அரசுக்கு ஐகோர்ட்டு உத்தரவு!!!

மாநிலத்தில் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும், ‘வீடியோ கான்பரன்ஸ்’ வசதியை 2017–ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் ஏற்படுத்துமாறு மராட்டிய அரசுக்கு மும்பை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.வீடியோ கான்பரன்ஸ்



ஜெயிலில் இருந்து கைதிகளை விசாரணைக்காக கோர்ட்டுக்கு அழைத்து செல்லும்போது, வழியில் சில இடர்பாடுகளை போலீசார் சந்திக்க நேரிடுகிறது. சமயங்களில், கைதிகள் போலீசாரை தாக்கிவிட்டு தப்பியோடும் சம்பவங்களும் நடைபெறுகின்றன.இதனை தவிர்க்கும் பொருட்டு, கைதிகளை ஜெயிலில் இருந்தவாறு ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக கோர்ட்டில் ஆஜர்படுத்த வழிவகை செய்ய கோரி மும்பை ஐகோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது.இந்த வழக்கு நீதிபதிகள் வி.எம்.கன்னடே மற்றும் நட்டன் சர்தேசாய் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஐகோர்ட்டு நிர்வாகம் தரப்பில் ஆஜரான வக்கீல், ‘‘மாநிலத்தில் உள்ள 2,200 கோர்ட்டுகளில், 248 கோர்ட்டுகளில் ‘வீடியோ கான்பரன்ஸ்’ வசதி இல்லை’’ என்று வாதிட்டார்.நிதி பற்றாக்குறை இல்லை

வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘‘மாநில அரசிடம் ஏராளமான நிதி இருக்கிறது. ஆகையால், நிதி பற்றாக்குறை பிரச்சினை இல்லை. நிதியை தவறான இடங்களில் மாநில அரசு செலவிடுவது தான் பிரச்சினை. மாநிலத்தில் உள்ள அனைத்து கோர்ட்டுகளிலும் 2017–ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள், வீடியே கான்பரன்ஸ் வசதி இடம்பெறுவதை மராட்டிய அரசு உறுதிப்படுத்த வேண்டும். இதன் நன்மைகள் ஏராளம்’’ என்று உத்தரவிட்டனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...