எமிஸ் இணையதளத்தில் தேர்வு எண் சேர்ப்பு; கால அவகாசம் நீட்டிக்க வலியுறுத்தல்!!!

பள்ளிக்கல்வி தகவல் மேலாண்மை (எமிஸ்) இணையதளத்தில் பதிவேற்றிய, பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின், விபரங்கள் சரிபார்க்க, கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டுமென, தலைமையாசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.



பள்ளிக்கல்வி தகவல்களை, ஆன்லைன் வழியாக அறிய, எமிஸ் இணையதளம், 2012ல் துவங்கப்பட்டது. இதில், மாணவர்களின் அனைத்து தகவல்களும் இணைத்து, தகவல் தொகுப்பு உருவாக்கும் பணிகள் நடக்கின்றன.

நடப்பு கல்வியாண்டில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, தேர்வு எண் வழங்கும் பணிகளுக்கு, எமிஸ் இணையத்தளத்தில் தகவல்கள் பதிவேற்ற உத்தரவிடப்பட்டது. இப்பணியை, டிச., 5ம் தேதியுடன், முடிக்க அறிவுறுத்தப்பட்டது.

முன்னாள் முதல்வர் ஜெ., உடல்நிலை மோசமான செய்தி வெளியானதால், பல தனியார் பள்ளிகள், நேற்று முன்தினம், திடீரென விடுமுறை அறிவித்தன.

இணையதள சேவை குறைபாடு காரணமாக, நேற்று முன்தினம், பல பள்ளிகளில், எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றிய தகவல்களை சரிபார்க்க முடியவில்லை.

எனவே, பொதுத்தேர்வு தகவல் பதிவுகளில், பிழைகளை திருத்த, கால அவகாசத்தை நீட்டிக்குமாறு, தலைமையாசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் சிலர் கூறுகையில், தற்போது பள்ளிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


மாணவர்களின் தகவல்களை, தொகுக்கும் முன், மீண்டும் ஒருமுறை சரிபார்க்க, பள்ளிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும். இல்லையெனில், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, தேர்வு எண், மதிப்பெண் சான்றிதழ் தயாரிக்கும் பணிகளில், குளறுபடிகள் ஏற்படலாம் என்றனர்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...