இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆட்டோ கட்டணம் மாற்ற அனுமதி!!!

ஆட்டோ கட்டணத்தை, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மாற்றி அமைக்க, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.


உயர் நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, ஆட்டோக்களுக்கான குறைந்தபட்ச கட்டணம், ஒவ்வொரு, கி.மீ.,க்குமான கட்டணத்தை நிர்ணயித்து, 2014ல், தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

ஆட்டோ உரிமையாளர், டிரைவர் பெயர்கள் மற்றும் புகார் தெரிவிக்க தொலைபேசி எண்ணை, ஆட்டோக்களில் குறிப்பிடவும், பெட்ரோல், டீசல் விலைக்கு ஏற்ப, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கட்டணத்தை மாற்றி அமைக்கவும், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

உயர் நீதிமன்ற உத்தரவு முறையாக பின்பற்றப்படவில்லை என, அதிகாரிகளுக்கு எதிராக, கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பின் செயலர், லோகு என்பவர், நீதிமன்ற அவமதி வழக்கு தொடர்ந்தார்.

அதேநேரம், 'மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கட்டணத்தை மாற்றி அமைக்க வேண்டும்' என உயர் நீதிமன்ற உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி, அரசு தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டது.

மனுக்களை, தலைமை நீதிபதி, எஸ்.கே.கவுல், நீதிபதி, சத்தியநாராயணன் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' விசாரித்தது. பெட்ரோல், டீசல் விலைக்கு ஏற்ப, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஆட்டோ கட்டணத்தை மாற்றி அமைத்து கொள்ள, அரசுக்கு முதல் பெஞ்ச் அனுமதி

வழங்கியது.

நீதிமன்றம் பிறப்பித்த மற்ற உத்தரவுகளை நிறைவேற்றியதற்கான அறிக்கையை, ஜன., 24ல் தாக்கல் செய்ய உத்தரவிட்டு, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையை, முதல் பெஞ்ச் முடித்து வைத்தது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...