சுயதொழில் தொடங்க மானியத்துடன் கடன்!

படித்த இளைஞர்கள் சுயதொழில் தொடங்க மானியத்துடன் ரூ.25 லட்சம் வரை கடனுதவி வழங்கப்படும் என்று தேனி மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டத்தில் கிராமம் மற்றும் நகர்ப்புறங்களில் புதிய தொழில் நிறுவனங்களை உருவாக்கி அதன்மூலம் சுய வேலைவாய்ப்பு,

பொருளாதாரம் மற்றும் தொழில் வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கத்தோடு தமிழக அரசால் புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டம் மாவட்ட தொழில் மையத்தால் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்தின் கீழ் 21 வயது முதல் 35 வயது வரை உள்ள பொதுப்பிரிவினரும், 21 வயது முதல் 45 வயது வரை உள்ள சிறப்புப்பிரிவினரும் உற்பத்தி மற்றும் சேவை தொழில்கள் தொடங்க வங்கிகளில் கடனுதவி கேட்டு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் முதல் தலைமுறை தொழில் முனைவோராகவும், பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு அல்லது தொழிற்கல்வி தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும். இவர்களுக்கு ரூ.5 லட்சம் முதல் ரூ.1 கோடி வரையிலான தொழில் திட்டங்களுக்கு 25 சதவிகித மானியத்துடன் கடன் வழங்கப்படும். ஒருவருக்கு அதிகபட்சம் ரூ.25 லட்சம் வங்கி கடனுதவி பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

மேலும் இத்திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நான்கு வாரங்கள் தொழில்முனைவோர் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும். தேனி மாவட்டத்தைப் பொருத்தவரை, பாக்கு மட்டை தட்டு, இரட்டை வட கயிறு, ஆயத்த ஆடைகள், கொட்டை முந்திரி, நெல் அரவை மில், பருப்பு மில்கள், எந்திரம் மூலம் மரச்சிற்ப வேலைகள், பாட்டில்கள், இலவம் பஞ்சு மெத்தை, தலையணைகள், லாரி பாடி பில்டிங் போன்ற உற்பத்தி நிறுவனங்களும், மருத்துவமனை, உடற்பயிற்சி கூடம், உயர்தர உணவகங்கள், பிரிண்டிங், எம்ப்ராய்டரி, ஆட்டோமொபைல், எலக்ட்ரிக் மோட்டார் பம்ப் சர்வீஸ், கணினி சார்ந்த சேவை நிறுவனங்கள் தொடங்கலாம். எனவே சுயதொழில் தொடங்க ஆர்வமுள்ள படித்த இளைஞர்கள் மேற்கண்ட திட்டத்தின் கீழ் மானியத்துடன் வங்கி கடனுதவி பெற்று தொழில் தொடங்க முன்வருமாறு மாவட்ட கலெக்டர் வெங்கடாசலம் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும் விவரங்களுக்கு பொதுமேலாளர், மாவட்டத் தொழில் மையம், தேனி அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...