சாதாரண போனிலும் பேடிஎம். சேவை!

ஸ்மார்ட்போன் அல்லாத, சாதாரண மொபைல் போன் வைத்திருப்போரும் பேடிஎம்-ல் பண பரிவர்த்தனை செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் 8ஆம் தேதி வெளியான பண மதிப்பிழப்பு அறிவிப்பிற்கு பிறகு ஆன்லைன் வர்த்தகம் அதிக
அளவிலான பயன்பாட்டாளர்களை பெற்று வருகிறது. அதற்கேற்றாற்போல், ஆன்லைன் பணப் பரிவர்த்தனை நிறுவனங்களும் பல்வேறு புதிய சேவை அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில் பேடிஎம். நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சாதாரண மொபைல் உபயோகிப்பவர்களும் பேடிஎம். நிறுவனத்தின் ’டோல்ஃப்ரீ’ எண்ணை பயன்படுத்தி பணப் பரிவர்த்தனை செய்யலாம்.

பேடிஎம். என்பது மின்னணு பணப் பரிவர்த்தனை நிறுவனமாகும். ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்கள் பேடிஎம். அப்ளிகேஷனை உபயோகித்து பணம் செலுத்தவோ, பெறவோ முடியும். இந்த சேவை தற்போது ஸ்மார்ட்போன் அல்லாத சாதாரண மொபைல் உபயோகிப்பவர்களும் பயன்படுத்தும் வகையில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

180018001234 என்ற ’டோல்ஃப்ரீ’ எண்ணை தொடர்பு கொண்டு முதலில் உங்களது மொபைல் எண்ணை பதிவு செய்ய வேண்டும். அதன் பிறகு நான்கு இலக்க பாஸ்வேர்ட்-ஐ பெற்றுக் கொள்ளவும். இந்த செயல்முறைகளின் படி, பதிவு செய்த பிறகு நாம் எப்போது வேண்டுமானாலும் பேடிஎம். மூலம் பணப் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். இதில் மொபைல் ரீசார்ஜ் செய்து கொள்ளும் வசதியும் சேர்க்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...