Breaking news தமிழகத்தின்"புதிய"தலைமை "செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமனம்!!!!!

தமிழக அரசின் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவின் வீட்டில் நேற்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அவரது மகன் இல்லம் மற்றும் அலுவலகங்களிலும் சோதனைகள் நடைபெற்றன.

தமிழக வரலாற்றிலேயே முதல் முறையாக தலைமைச் செயலாளர் ஒருவரிடம் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றுள்ளது. எனவே அவரை அப்பதவியிலிருந்து நீக்க கோரிக்கைள் வலுத்தன.


 Tamilnadu new chief Secretary will be Girija Vaidyanathan?
இந்த நிலையில் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவை அப்பதவியிலிருந்து தமிழக அரசு இன்று நீக்கப்பட்டுள்ளார். புதிய தலைமைச் செயலாளராக கிரிஜா வைத்தியநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது நில நிர்வாகத்துறை ஆணையாளராக பதவியிலுள்ளார். இந்த பதவியையும் அவர் கூடுதலாக கவனிப்பார்.

ஆளுநர் உத்தரவுப்படி பொதுத்துறை முதன்மை செயலாளர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கிரிஜா வைத்தியநாதன் 1981ம் ஆண்டு பேட்ஜ் தமிழ்நாடு அணி ஐஏஎஸ் அதிகாரியாகும். ஐஏஎஸ் அதிகாரியாக 30 வருட காலம் பணியாற்றியவர். பல்வேறு துறைகளிலும் அவர் பணியாற்றியுள்ளார். நல்வாழ்வுத்துறையில் பல திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தியவர் என்ற நற்பெயரை ஈட்டியவர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...