ஜியோ மேம்பாட்டுக்கு 30,000 கோடி!!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஜியோ நெட்வொர்க் சேவை மேம்பாட்டுக்காக ரூ.30,000 கோடி முதலீடு செய்யத் திட்டமிட்டிருப்பதாக அந்நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார்.



ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி அறிமுகமானது. டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரை வாய்ஸ் கால், 4ஜி டேட்டா உள்ளிட்ட அனைத்து சேவைகளும் இலவசம் என்று அறிவித்த அம்பானி, இச்சலுகை இவ்வாண்டு மார்ச் 31ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்படுவதாக புத்தாண்டில் அறிவித்தார். எனினும் ஜியோ அழைப்புகள் அடிக்கடி துண்டிக்கப்படுவதாகவும், டேட்டா இணைப்பில் பிரச்னைகள் இருப்பதாகவும் வாடிக்கையாளர் தரப்பிலிருந்து பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டு வருகின்றன.

எனவே, ஜியோ நெட்வொர்க் சேவை மேம்பாட்டுக்காக அதிகளவில் முதலீடு செய்ய ரிலையன்ஸ் ஜியோ திட்டமிட்டுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற அந்நிறுவனத்தின் இயக்குநர்கள் குழு கூட்டத்தில் இதற்கான முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். ஏற்கனவே, ஜியோ தொலைத் தொடர்பு சேவை நிறுவனத்திற்காக மட்டும் ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ரூ.1.71 லட்சம் கோடி முதலீடு செய்துள்ளது. இந்நிலையில், மேலும் ரூ.30,000 கோடியை முதலீடு செய்து, தொலைத்தொடர்புப் பணிகளில் மேம்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளவிருப்பதாக ஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...