டிஜிட்டல்' பரிவர்த்தனை: 45 பேருக்கு 'ஜாக்பாட்'!!!

'டிஜிட்டல்' பரிவர்த்தனையை பயன் படுத்தியதன் மூலம், மூன்று வாரங்களில், 45 பேர் லட்சாதிபதியாகி உள்ளனர்.

செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பைத் தொடர்ந்து, ரொக்கப் பயன்பாட்டை குறைக்கும் வகையில், 'டிஜிட்டல்' பரிவர்த்தனையை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது.

அதன் ஒரு கட்டமாக, 'டிஜிட்டல்' பரிவர்த்தனை மேற்கொள்பவர்களுக்கான பரிசு திட்டம் அறிவிக்கப்பட்டது.

குலுக்கல் முறையில் தேர்வு


ரிசர்வ் வங்கியின் துணை அமைப்பான, என்.பி.சி.ஐ., எனப்படும், தேசிய பண பரிவர்த் தனை வாரியம் சார்பில், குலுக்கல் முறையில்,
பரிசுக்கு உரியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்ற னர். டிச., 9 முதல், வரும், ஏப்., 14 வரையிலான காலக்கட்டத்தில், 'ரூபே கார்டுகள், பீம் ஆப்' உள்ளிட்டவை மூலம், 'டிஜிட்டல்' பரிவர்த்தனை மேற்கொள்வோருக்கு பல்வேறு பரிசுகள் அறிவிக்கப்பட்டன

அதன்படி, வாரத்தில், 15 பேருக்கு, தலா, ஒரு லட்சம் ரூபாய் என, கடந்த, மூன்று வாரங்களில், 45 பேர் லட்சாதிபதி ஆகியுள்ளனர்.

இதைத் தவிர, வாராந்திர பரிசுகளான, தலா, 50 ஆயிரம் ரூபாய், 500 வர்த்தகர்கள், 114 பொதுமக்கள் என, 614 பேருக்கும், தலா, 10 ஆயிரம் ரூபாய், 6,500 பேருக்கும் கிடைத்துள்ளது. மேலும், தினசரி பரிசான, 1,000 ரூபாய், 15 ஆயிரம் பேருக்கு வழங்கப் பட்டு உள்ளது. இந்தப் பரிசுகள் அனைத்தும் அவர் களுடைய வங்கிக் கணக்கில், நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.

வீடியோவில் பதிவு

''இந்தப் பரிசுகள் அனைத்தும், கம்ப்யூட்டர் மூலம் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப் படுகின்றன. 'எர்னஸ்ட் அண்ட் யங்' என்ற தணிக்கை நிறுவனத் தின் முன்னிலையில் நடக்கும் நடவடிக்கைகள் அனைத்தும், வீடியோ பதிவு செய்யப்படுகின்றன,என, என்.பி.சி.ஐ., தலைமை திட்ட அலுவலர், எஸ்.கே.குப்தா தெரிவித்துள்ளார்.பம்பர் பரிசுகளான, தலா ஒருவருக்கு, ஒரு கோடி, 50 லட்சம் மற்றும், 25 லட்சம் ரூபாய், திட்டத்தின் இறுதி நாளான, ஏப்., 14ல் அறிவிக்கப்பட உள்ளன.

தமிழகம் 'டாப்!'

இந்தப் பரிசு திட்டத்தின் கீழ், இதுவரை அதிக அளவு பரிசுகள் வாங்கியோரில், மஹாராஷ் டிரா, ஆந்திரா, தமிழகம், உத்தர பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்கள், முதல், ஐந்து இடங்களில் உள்ளன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...