மூன்றில் முந்துகிறது மதுரை காமராஜ் பல்கலை!!!

மதுரை, சென்னை உட்பட மூன்று பல்கலைகளில், மதுரை காமராஜ் பல்கலைக்கு விரைவில் புதிய துணைவேந்தர் நியமிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னை பல்கலை, அண்ணா மற்றும் மதுரை காமராஜ் பல்கலைகளில் காலியாக உள்ள துணைவேந்தர் பணியிடங்களை நிரப்ப தேர்வுக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.


சென்னை பல்கலை துணைவேந்தர் தேர்வுக்குழு ஒன்றிணைந்து இதுவரை கூட்டங்கள் நடத்த வில்லை என சர்ச்சை எழுந்துள்ளது. அண்ணா பல்கலை துணைவேந்தர் தேர்வுக்குழு மீது பேராசிரியர்கள் ஒரு தரப்பினர் அதிருப்தியடைந்து போராட்டங்கள் நடத்தும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இந்த இரு பல்கலைகளிலும் புதிய துணைவேந்தர்கள் தேர்வு பணிகளில் சிக்கல் நீடிக்கிறது.

ஆனால் மதுரை காமராஜ் பல்கலையில் துணைவேந்தர் விண்ணப்பம் மீதான சர்ச்சை மட்டுமே உள்ளது. யு.ஜி.சி., பரிசீலித்து அரசு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதால், இதற்கு எளிதில் தீர்வு கிடைத்துவிடும். இதனால் பிப்ரவரி ௨வது வாரத்திற்குள் புதிய துணைவேந்தர் தேர்வு செய்ய வாய்ப்புள்ளது.


அதேநேரம் பத்து ஆண்டு பேராசிரியர் அனுபவம் அல்லது அதற்கு இணையான தகுதி என்ற விதியில், &'இணையான தகுதி&' என்பதற்கு உரிய விளக்கம் வெளியிட வேண்டும் என பேராசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...