சமூக வலைதளங்களை நாடும் வீரர்களுக்கு தண்டனை : பிவின் ராவத்!

ராணுவ வீரர்கள் சமூகவலைதளங்களில் புகாரைப் பரப்பினால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ராணுவ தளபதி பிபின் ராவத் எச்சரித்துள்ளார்.

சமீபத்தில், எல்லை பாதுகாப்பு படையின் 29வது பட்டாலியனில் பணியாற்றி வரும் தேஜ் பதூர் யாதவ் என்பவர் தங்களுக்கு வழங்கப்படும் உணவு தரமானதாக
இல்லை என பேஸ்புக் பக்கத்தில் வீடியோவுடன் பதிவு செய்திருந்தார். இந்த வீடியோ வைரலாகப்பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதைத் தொடர்ந்து, மற்றொரு ராணுவ வீரர், தனது உயரதிகாரிகள் பூட்ஸை பாலீஷ் போட சொல்வதாக பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.

பிரதமர் அலுவலகம் உள்துறை அமைச்சகத்திடம் தேஜ் பகதூர் யாதவுடைய கருத்து கேட்டதையடுத்து ராணுவ தளபதி பிவின் ராவத் வெள்ளிகிழமையன்று பேட்டியளித்தார்.

அப்போது ”வீரர்களின் பிரச்னைகளை போக்குவதற்கு புகார் பெட்டி உள்ளது. வீரர்கள் சமூக வலைதளங்களில் பேசி கருத்து தெரிவிக்க வேண்டாம். உங்கள் கருத்துக்களை எங்களுக்கு தெரியப்படுத்த வேண்டும். உங்களின் பிரச்னைகளை தீர்க்க இரண்டு இடங்களில் குறைதீர்ப்பு பெட்டி வைக்கப்படும்” என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ராணுவ தினத்தை முன்னிட்டு தலைநகர் டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ராணுவ தளபதி பிபின் ராவத் பங்கேற்றார். கடமையின்போது பலியான வீரர்களுக்கு வீர வணக்கம் செய்து அஞ்சலி செலுத்தினார்.

அப்போது, ”எந்த பிரச்னையாக இருந்தாலும் என்னை நேரில் வந்து சந்திக்கலாம். ராணுவ வீரர்களுக்கு ஒழுங்கு நடவடிக்கை விதிகள் உள்ளது. அதை மீறி, சமூக வலைதளங்கள் மூலமாக தங்களது புகார்களை பரப்புவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...