கிரெடிட் கார்டு கட்­ட­ணங்கள்!!!

கிரெடிட் கார்டு பயன்­பாட்டில் கவ­ன­மாக இருப்­பது அவ­சியம். அதே போல கிரெடிட் கார்டு கட்­ட­ணங்கள் குறித்தும் கவ­ன­மாக இருக்க வேண்டும். கிரெடிட் கார்டு வச­தி­யா­னது, பல­வித அனு­கூ­லங்­களை கொண்­டது; என்­றாலும் அதற்கு ஒரு விலை இருக்­கி­றது. ஆம், கிரெடிட் கார்டு பயன்­பாடு பல­வித கட்­ட­ணங்­களை கொண்­டி­ருக்­கி­றது. பண மதிப்பு நீக்க நட­வ­டிக்­கைக்குப் பிறகு நகர்­புற மக்­க­ளிடம் கிரெடிட் கார்டு பயன்­பாடு அதி­க­

ரித்­துள்ள நிலையில், இந்த கட்­ட­ணங்­களை அறிந்­தி­ருப்­பது அவ­சியம்.
ஆரம்ப கட்­டணம் :கிரெடிட் கார்டு பயன்­ப­டுத்த துவக்க கட்­டணம் செலுத்த வேண்டும். வங்­கிகள் பொது­வாக அனு­மதி கட்­டணம் (ஜாயினிங் பீ) மற்றும் ஆண்டு கட்­ட­ணத்தை வசூ­லிக்­கின்­றன. என்­றாலும் சில கார்டு நிறு­வ­னங்கள் இவை இல்­லாமல் இல­வ­ச­மா­கவும் வழங்­கலாம். அனு­மதி கட்­டணம், 200 ரூபாயில் இருந்து துவங்­கு­கி­றது. இது, 25,000 ரூபாய் வரை செல்­லலாம். ஆண்டு கட்­டணம், 299 முதல் 800 ரூபாய் வரை இருக்­கலாம். சில கார்டு நிறு­வ­னங்கள், முத­லாண்டில் சலுகை அளித்து கட்­ட­ணங்­களை ரத்து செய்­யலாம். இரண்டாம் ஆண்டில் கவனம் தேவை.
அப­ராத தொகை :கிரெடிட் கார்டு பில் தொகையை உரிய நேரத்தில் செலுத்­தா­விட்டால் அந்த தொகைக்­கான வட்டி செலுத்த வேண்டும். பொது­வாக வட்டி விகிதம் ஆண்­டுக்கு 22 முதல் 48 சத­வீதம் வரை அமை­கி­றது. தாம­த­மாக செலுத்­து­வ­தற்­கான கட்­டணம் (இது வங்­கிக்கு வங்கி மாறு­படும்) மற்றும் வட்டி மீதான சேவை வரியை சேர்த்துக் கொண்டால் கணி­ச­மான தொகை­யாக இருக்­கலாம். தாம­தத்­திற்­கான கட்­டணம், 750 ரூபாய் வரை செல்ல வாய்ப்­புள்­ளது. கார்டு தொலைந்தால் அல்­லது திருடு போனால் புதிய கார்­டிற்கு கட்­டணம் உண்டு.
ரொக்க கட்­டணம் :எல்லா கார்­டு­க­ளுக்கும் கடன் வரம்பு உண்டு. இந்த கடன் வரம்­புக்கு அதி­க­மாக பயன்­ப­டுத்­தினால், கூடுதல் தொகையில், 2.5 சத­வீதம் வரை அப­ராதம் விதிக்­கப்­ப­டலாம். மேலும், இது உங்­களின் கிரெடிட் ஸ்கோரையும் பாதிக்கும். கார்டு மூலம் ரொக்­கப்­பணம் எடுக்­கலாம். ஆனால், கிரெடி கார்டு மூலம் ரொக்க முன்­பணம் எடுக்கும் போது அதற்கு கட்­டணம் செலுத்த வேண்டும். பொது­வாக இது ரொக்­க­மாக எடுக்கும் தொகையில், 2.5 சத­வீ­த­மாக இருக்­கலாம்.
பரி­வர்த்­தனை முறை :பில் தொகையை எப்­படி செலுத்­து­கி­றீர்கள் என்­ப­தையும் கவ­னிக்க வேண்டும். வங்கி கிளை அல்­லது ஏ.டி.எம்., மூலம் ரொக்­க­மாக செலுத்­தினால் செயல்­முறை கட்­டணம் செலுத்த வேண்டும். வெளியூர் காசோலை என்றால் அதற்கும் செயல்­முறை கட்­டணம் உண்டு. காசோலை தொகை மற்றும் கார்டு நிறு­வ­னத்­திற்கு ஏற்ப இது அமை­யலாம். நெட் பாங்கிங் அல்­லது மொபைல் பாங்கிங் மூலம் பணம் செலுத்­து­வதே சிறந்த வழி. இவைத்­த­விர ஒரு சில வர்த்­தக நிறு­வ­னங்கள் தாங்கள் செலுத்த வேண்­டிய தொகையில் ஒரு பகு­தியை கூடுதல் கட்­ட­ண­மாக வசூ­லிக்­கலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...