கல்வி உரிமை சட்டம் குறித்து நிடி ஆயோக் அதிருப்தி: மறு ஆய்வு செய்யுமாறு மத்திய அரசுக்கு பரிந்துரை !

'அனைவருக்கும், எட்டாம் வகுப்பு வரை இலவச கட்டாய கல்வி அளிக்க வகை செய்யும் கல்வி உரிமைச் சட்டம், பெயரளவுக்கு மட்டுமே செயல்படுகிறது; இந்த திட்டத்தால் உண்மையான நோக்கம் நிறைவேற வில்லை; இதுபற்றி மறு ஆய்வு செய்ய வேண்டும்' என, மத்திய அரசுக்கு, 'நிடி ஆயோக்' அமைப்பு ஆலோசனை கூறியுள்ளது.


நாட்டில், 6 முதல் 14 வயது வரையிலான அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாயமாக, இலவச கல்வி அளிக்க வகை செய்யும் கல்வி உரிமைச் சட்டம், 2009ல் கொண்டு வரப்பட்டது. 'அனைத்து பள்ளி குழந்தைகளையும், 8ம் வகுப்பு வரை படிக்க வைக்க வேண்டும்; தனி யார் பள்ளிகள், 25 சதவீத இடங்களை, ஏழை மாணவர்களுக்கு வழங்க வேண்டும்; அதற்கான கட்டணத்தை, அரசு செலுத்த வேண்டும்' என்பது இச்சட்டத்தின் முக்கிய அம்சங்களாகும்.

இந்த சட்டம் அமலுக்கு வந்து, ஏழு ஆண்டுகள் முடிந்துள்ள நிலையில் அதனால் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து திட்ட கமிஷனுக்கு
 மாற்றாக, நீண்ட கால திட்டங்கள் தொடர்பாக, மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கி வரும், 'நிடி ஆயோக்' அமைப்பு ஆய்வு செய்துள்ளது. அதில், பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.



இதுபற்றி நிடி ஆயோக் வட்டாரங்கள் கூறியதாவது:




கல்வி உரிமைச்சட்டம் குறித்து ஆய்வு செய்த, ஆண்டு கல்வி நிலை அறிக்கை, அதன் அவல நிலையை வெளியிட்டுள்ளது. 8ம் வகுப்பு பயிலும் குழந்தைகளில் பலருக்கு, தாய் மொழி எழுத்துகள் கூட தெரிய வில்லை; பெருமளவு நிதி முறைகேடு நடைபெறுகிறது. பல மாநிலங்களில், பெயரளவுக்கு தான் திட்டம் செயல்படுகிறது. மாணவர்கள் கல்வி பயிலுவதாக கணக்கு மட்டுமே காட்டப்படுகிறது.

ஆனால், அவர்களது கல்வி நிலைமையை சோதித் தால் வேதனை மட்டுமே மிஞ்சுகிறது. எனவே, இந்த திட்டத்தால் ஏற்பட்டுள்ள பயன் குறித்து முழுமை யாக மறு ஆய்வு செய்ய வேண்டும். தேவையான மாற்றங்கள் செய்தால் மட்டுமே குழந்தைகளுக்கு பயனளிக்கும் திட்டமாக இது இருக்கும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறியுள்ளன.





 மோசடி அம்பலம்




கல்வி உரிமைச்சட்டத்தின் படி, பல்வேறு மாநிலங் களில், 8ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கு உணவு, பாடப் புத்தகங்கள் மற்றும் இதர பொருட்கள் வழங்கப்படுகின்றன; இதில் பெரும் மோசடி நடந்து வருவது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து, நிடி ஆயோக் வட்டாரங்கள் கூறியதாவது:

போலி ரேஷன் கார்டுகள் மூலம் பொய்யான
பெயரில் குழந்தைகளின் பெயர்கள் பட்டியலில்சேர்க்கப்பட்டு முறைகேடு நடந்துள்ளது. இதைத் தடுக்க, கல்வி உரிமைச் சட்டத்தின் மூலம் பயன் பெறும் பயனாளி களை, ஆதார் எண் மூலம் அடையாளம் காண வேண்டும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறிஉள்ளன.



அதிர வைக்கும் அதிர்ச்சி தகவல்




ஆண்டு கல்வி நிலை அறிக்கையில் வெளி யாகியுள்ள பகீர் தகவல்கள்:

* எட்டாம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு, தாய் மொழி எழுத்துகள் முழுமையாக தெரியவில்லை
* தங்கள் பெயரைக் கூட எழுத தெரியவில்லை
*ஐந்தாம் வகுப்பு பயிலும் மாணவர்களில், 50 சதவீதம் பேருக்கு, தங்கள், 2ம் வகுப்பு பாடப் புத்தகங்களை வாசிக்கக் கூட முடியவில்லை
* மாணவ, மாணவியருக்கு பெயரளவுக்கு மட்டுமே கல்வி வழங்கப்படுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...