பாஸ்ட் புட்' மீது வரி உயர்கிறது!!!

துரித உணவுகள் (பாஸ்ட் புட்) மற்றும் இனிப்பு கலக்கப்பட்ட குளிர்பானங்கள் ஆகியவற்றிற்கான வரிகள், வரும் பட்ஜெட்டில் உயர்த்தப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.



உடல் பருமன்:

நீரிழிவு, இதய கோளாறு மற்றும் உடல் பருமனால் ஏற்படும் நோய்கள் அதிகரித்து வருவதால், இதனை தடுக்கும் வகையில் கொழுப்பு சத்துக்கள் அதிகம் நிறைந்த துரித உணவுகள் மற்றும் இனிப்பு கலக்கப்பட்ட குளிர்பானங்கள் ஆகியவற்றின் மீது கொழுப்பு வரியை விதிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


சுகாதாரம் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறைகளை சேர்ந்த செயலாளர்கள் விடுத்த கோரிக்கையின் பேரில் இந்த வரியை உயர்த்த மத்திய அரசு முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

பிரதமர் மோடி தலைமையில் நடந்த பட்ஜெட் ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரம் தொடர்பான 11 பேர் குழுவும் இந்த வரியை விதிக்க பரிந்துரை செய்துள்ளது. உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு கழகமும் இது தொடர்பான பரிந்துரையை மத்திய அரசிற்கு ஏற்கனவே விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.



ஒவ்வொரு ஆண்டும், இந்தியாவில் சுமார் 5.8 மில்லியன் பேர் துரித உணவுகளால் ஏற்படும் இதய மற்றும் நுரையீரல் நோய்களாலும், புற்றுநோயாலும், சர்க்கரை நோயாலும் உயிரிழந்து வருவதாக ஆய்வு அறிக்கை ஒன்று கூறுகிறது. இந்தியாவில் 2015 ல் மட்டும் 69.1 மில்லியன் பேர் சர்க்கரை நோயால் உயிரிழந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...