மருந்து மாத்திரைகளுக்கு தட்டுப்பாடு!

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் 25 வகை மருந்துகளுக்கு அடிக்கடி தட்டுப்பாடு ஏற்படுவதால் நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர்.

தமிழ்நாடு மருந்துவ சேவைக் கழகம் ஆண்டுக்கு 300 கோடி ரூபாய் முதல் 400 கோடி ரூபாய் வரை மதிப்புள்ள 700 வகை மருந்துகளை கொள்முதல் செய்து,
தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவ மனைகள், மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகள், தாலுகா மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதாரநிலையங்கள் மற்றும் இஎஸ்ஐ மருத்துவமனைகளுக்கு தேவையான, மருந்து, மாத்திரைகளைஅனுப்பி வைக்கிறது.

இந்நிலையில், மதுரை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆண்டு தோறும், இந்த மருந்துகள் மற்றும் அன்றாடம் தேவைப்படும் அறுவை சிகிச்சை பொருட்கள், கருவிகளை மருத்துவ சேவை கழகம் கொள்முதல் செய்து அனுப்பி வைக்கிறது. கடந்த ஒரு ஆண்டாக, மருந்துகள் விநியோகம் சீராக இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, நோயாளிகள் தட்டுப்பாடுள்ள மருந்துகளை பெற முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து மருத்துவமனை மருந்தாளுநர்கள், “மருத்துவ சேவைக் கழகத்தில் மருந்துகளை கொள்முதல் செய்யும் குழுவில், எந்ததெந்த மருந்துகள் தேவை என்பதை உறுதி செய்யும் மருத்துவர், மருந்தாளுநர்கள் இடம் பெறவில்லை. மருந்தியல் பற்றி தெரியாதவர்கள், இந்த குழுவில் இடம்பெற்றுள்ளனர். அவர்களால் தேவையான மருந்துகளை திட்டமிட்டு தட்டுப்பாடில்லாமல் கொள்முதல் செய்து அனுப்ப முடியவில்லை. இதனால், மருத்துவமனைகளுக்கு மருந்துகள் விநியோகம் சீராக இல்லை. நோயாளிகளுக்கு தேவைப் படக்கூடிய ரத்த அழுத்த மாத்திரைகள், சர்க்கரை நோய் மருந்துகள், தூக்க மருந்துகள், மனநோய் பிரிவு மருந்துகள் உள்ளிட்ட 25 வகை மருந்துகளுக்கு அடிக்கடி தட்டுப்பாடு ஏற்படுகிறது.சர்க்கரை நோயாளிகள், பிரஷர் நோயாளிகள் இந்த மருந்துகளை தொடர்ச்சியாக சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால் அவர்கள் உடல்நலன் பாதிக்கப்படும்” என தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து மருத்துவமனை டீன் எம்.ஆர்.வைரமுத்து ராஜூ,” இப்போது டெண்டர் விடப்பட்டு மருத்துவ சேவைக்கழகம் மருத்துவமனைகளுக்கு தேவையான மருந்து மாத்திரைகளை கொள்முதல் செய்துள்ளது. அந்த மருந்து, மாத்திரைகள் தட்டுப்பாடில்லாமல் மருத்துவமனைகளுக்கு வரத் தொடங்கியுள்ளது. இனி எந்த பிரச்சினையும் இல்லாமல் மருந்துகள் நோயாளிகளுக்கு விநியோகிக்கப்படும்” என தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...