வழக்குகள் தேக்கம் - நீதிபதிகள் பற்றாக்குறை முக்கிய காரணம் !!

2015-2016 ஆண்டுக்கான இந்திய நீதித்துறையின் ஆண்டறிக்கை உச்ச
நீதி மன்றத்தில் சமர்ப்பிக்கபட்டுள்ளது. அதில் உள்ள சில  தகவல்கள் பின்வருமாறு.


 நீதிபதிகள் பற்றாக்குறை
காரணமாக பல்வேறு
உயர் நீதிமன்றங்களில் 40.54 லட்சம் வழக்குகள் தேக்கமடைந்துள்ளன.


இவற்றில் 7 லட்சத்துக்கும் அதிகமான வழக்குகள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. இதில், 29,31,352 சிவில் வழக்குகளும் 11,23,178 கிரிமினல் வழக்குகளும் அடக்கம்.

 இந்தியாவில் உள்ள 24
உயர் நீதிமன்றகளில் 1079 நீதிபதிகள் பணியாற்ற வேண்டும். ஆனால் 608 நீதிபதிகள் மட்டுமே பணியாற்றி வருகிறார்கள் . இது மொத்த எண்ணிக்கையில் 44 சதவிகித பற்றாக்குறையாகும்

   

 சென்னை - இரண்டாம் இடம்:

அதிக வழக்குகள் தேங்கியுள்ள நீதிமன்றங்கள் பட்டியலில் மூன்று லட்சம் வழக்குகளுடன் சென்னை உயர் நீதிமன்றம் இரண்டாவது இடத்தில் உள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் சுமார் 3 லட்சத்துக்கும் மேல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

 இந்திய நீதிமன்றங்களில் அலகாபாத் உயர் நீதிமன்றம் தான் மிக குறைவான நீதிபதிகளைக் கொண்டு இயங்கி வருகிறது.160 நீதிபதிகள் இருக்கவேண்டிய இடத்தில் 78 நீதிபதிகள் மட்டுமே இருக்கின்றனர்.

இதனால், அங்கு சுமார் 9.24 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில் மூன்று லட்சம் வழக்குகள் கடந்த 10 ஆண்டுகளாக நிலுவையில் உள்ளன. இதற்கு அடுத்து அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளது,

 மும்பை உயர் நீதிமன்றத்தில்  சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதில், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் 10 வருடங்களாக நடந்து வருகிறது.

வழக்குகளை விரைவாக முடியாமல் கால தாமதமாக முக்கிய  காரணமாக நீதிபதிகள், வழக்கறிஞர்கள் இல்லை.

 முதலாவதாக, நாடு முழுதும் கீழமை நீதிமன்றத்திலிருந்து மேல் மட்டம் வரை இருக்க வேண்டிய நீதிபதிகளின் எண்ணிக்கையிலேயே  பற்றாக்குறை நிலவுகிறது.

இரண்டாவதாக, நீதிமன்றங்கள் எண்ணிக்கையும் நீதிபதிகள் எண்ணிக்கையும் உயர்தப்பட வேண்டும்.


மூன்றாவதாக, நீதித்துறை கட்டமைப்பை பலப்படுத்த வேண்டும்.

இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...