சுகாதாரப் பட்டியலில் இணைந்த கோவை!

திறந்தவெளியில் மலம் கழிப்பதால் சுகாதாரம் பாதிப்படுகிறது என்பதை கருத்தில் கொண்டு, ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறையை கட்டாயமாக அமைக்க வேண்டும் என்ற சிறந்த திட்டத்தினை நடைமுறைப்படுத்தியது மாநில அரசு. கிராம புறங்களில் பெரும்பாலும் இது பற்றிய விழிப்புணர்வு இல்லை என அறிந்து பல்வேறு விழிப்புணர்வு மையங்கள்

அமைத்தும் செயல்படுத்தி வருகிறது. 2013ஆம் ஆண்டு உலகத்தில் திறந்தவெளியைக் கழிப்பிடமாகப் பயன்படுத்துவோரில் 58% பேர் இந்தியர்கள் என்றும், சீனா, இந்தோனேசியா போன்ற நாடுகளில் வெறும் 5% மக்கள்தான் திறந்த வெளியைக் கழிப்பிடமாகப் பயன்படுத்துகின்றனர் என்றும் அறிக்கையில் தெரிவித்துள்ளது. இந்த நிலையை மாற்ற மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தற்போது பயனடைந்துள்ளது.

கேரளா மற்றும் ஹிமாச்சல் பிரதேஷ் மாநிலத்தினை தொடர்ந்து தமிழகத்தின் கோவை மாநகராட்சியும் திறந்தவெளி கழிப்பிடமில்லாத நகரமாக மாறியுள்ளது என தூய்மை பாரத இயக்கம் மற்றும் மத்திய நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் இந்திய தர கவுன்சில் அறிவித்துள்ளது. இதற்கான சான்றிதழை, தர கவுன்சிலின் திட்ட மேலாளர் புவனேஷ் ரவாத், மாநகராட்சி தனி அலுவலர் விஜய கார்த்திகேயனிடம் வழங்கினார்.

கடந்த 5, 6-ம் தேதிகளில் கோவை மாநகராட்சியில் பல்வேறு குடியிருப்புகள், பொதுக் கழிப்பிடங்கள், தனிநபர் கழிப்பிடங்கள், குடிசை, வர்த்தகப் பகுதிகள், குளக்கரையை ஒட்டிய பகுதிகள், பள்ளிகளில் இந்திய தர கவுன்சில் குழுவினர் கோவை நகரில் ஆய்வு செய்தனர்.

இது குறித்து சுகாதார துறை அலுவலர் கூறும்போது, “ஒத்துழைப்பு வழங்கிய பொதுமக்கள் அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். வருங்காலங்களில் பொதுமக்கள் திறந்த வெளியில் மலம் கழிக்காமல் இருக்குமாறும், தனிநபர், பொது மற்றும் சமுதாயக் கழிப்பிடங்களை மட்டுமே பயன்படுத்துமாறும் கேட்டுக் கொள்கிறேன். பொது இடங்கள் மற்றும் வீடுகளில் கழிப்பிட வசதி இல்லாமல் இருந்தால், சம்பந்தப்பட்ட மாநகராட்சி மண்டல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். உடனடியாக கழிப்பிடம் கட்ட ஏற்பாடு செய்யப்படும்” என தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...