மக்கள் தொகையை குறைக்க தனியார் பள்ளியின் புதிய விதி!

மக்கள் தொகையை குறைக்க பல்வேறு சட்டங்கள் இருந்தாலும். சட்டங்கள் பற்றி அறியாத பாமர மக்களால் நாட்டில் மக்கள் தொகை பெருகிவருகிறது என்பதை உணர்ந்த ஒரு தனியார் பள்ளி அதன் விண்ணப்ப படிவங்களில் புதிதாக ஒரு நிபந்தனையை சேர்த்துள்ளது. டெல்லியில் சல்வான் என்ற பெயரில் இயங்கி வரும்

பள்ளியில் மாணவ-மாணவியர் சேர்க்கைக்கான விண்ணப்ப படிவங்கள் வழங்கப்பட்டு, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், மேற்படி விண்ணப்ப படிவங்களில் இருக்கும் நிபந்தனைகளுடன் புதிதாக ஒரு நிபந்தனையும் சேர்ந்துள்ளது பள்ளி நிர்வாகம். அதாவது இரண்டு குழந்தைகளுக்கு மேல் வைத்திருக்கும் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு இந்தப் பள்ளியில் இடம் கேட்டு விண்ணப்பிக்க வேண்டாம் என்ற நிபந்தனை விதித்துள்ளது.

அந்த பள்ளியின் நிர்வாகி சுஷில் சவான் இதுபற்றி கூறுகையில் மக்கள்தொகை பெருகிக் கொண்டே வருவதை கருத்தில் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

மக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்த இந்த முயற்சி எடுக்கப்பட்டாலும், பல்வேறு விமர்சனங்க்களை பெற்று வருகிறது. பள்ளியின் விளம்பரத்திற்காக இதுபோல் செய்திருக்க வாய்ப்புள்ளது என்றும் சில விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...